இந்து மதமும் சாதியும்!!!

$elvan அவர்களின் பதிவில் மயூரான் அவர்கள் கேட்டக் கேள்வியின் பதிலாக இந்த பதிவு.

மதத்தின்/கடவுளின் அடிப்படையில் தோன்றியதா சாதி? எனக்கு புரிந்த வகையில் இல்லை. அப்படி என்றால் திருமாலை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும், சிவனை வணங்குபவர்கள் அனைவரும் ஒரு சாதியாகவும் இருந்திருக்க வேண்டும்.

தொழிலை சார்ந்தே சாதிகள் அமைந்தன. அதனால் அன்றைய நிலையில் ஒரு சில நன்மைகளும் இருந்தன. வைத்தியன் மகன் சிறுவயதிவிருந்தே தந்தைக்கு உதவி செய்து தொழிலைக் கற்றுக் கொண்டான். வணிகனுடைய பிள்ளைகள், கோவில் அர்ச்சகரின் பிள்ளைகள், விவசாயின் பிள்ளைகள், அரச வாரிசுகள் என்று அனைவரும் பெரும்பாலும் தங்கள் தந்தையிடமிருந்தே கற்றனர்.
(இன்றைய கல்வி வசதி அவர்களுக்கு இல்லை)

இது அனைவருக்கும் பொருந்தியதாகவே இருந்தது. ஒரு பெருவணிகனுடைய மகன் விவசாயம் செய்ய வந்தால் அவனுக்கு அந்த தொழிலில் அனுபவமிருக்காது. அதனால் அதில் அவனுடைய வெற்றி வாய்ப்பும் குறைவே.
இன்றைய நிலையில் இருக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே.

பெண் கொடுக்கும் விஷத்திலும் இதுவே முறையானது. வணிகன் ஒருவனின் மகள் அரச குடும்பத்தில் சென்றால் பணம் அதிகம் சம்பாதிப்பது ஒன்றே அவள் குறியாக இருக்குமே தவிர மக்கள் நலனில் எண்ணம் செல்லாது.
அதனால் ஒரே தொழில் செய்யும் மக்களுக்குள் பெண் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.

முதலில் இந்த முறையில் மக்களுக்கு எளிமையாக இருப்பதற்காகவே சாதிகள் தோன்றின. பிறகு இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வலியவன் எளியோனை அடக்கி ஆள ஆரம்பித்தான்.

இன்று பலர் சொல்வது போல் தமிழர்கள் அனைவரும் முட்டாள்களாக இருந்ததாகவும், எங்கிருந்தோ வந்தவர்கள் அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை.

சாதியின் இன்றைய நிலை:
ராஜாஜி அவர்களின் குலவழிக் கல்வி மட்டும் இன்று தமிழ் நாட்டில் இருந்திருந்தால், நானெல்லாம் இன்று வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கமாட்டேன். எங்கோ மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன்.

கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் திட்டத்தால் அனைவருக்கும் கல்வி என்ற நிலை ஏற்பட்டது. பள்ளியில் அனைத்து சாதி மக்களும் இணைந்து பாடம் படிப்பதனால் அவரவர் தங்களின் சாதியின் அடையாளத்தை இழந்து வருகின்றனர்.

இன்று பல கலப்பு திருமணங்கள் நடக்கின்றன. சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் நான் பார்த்து பல காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் மறுப்பு
தெரிவித்தாலும் ஒருவழியாக இறுதியில் ஒத்துக் கொள்கின்றனர்.

கல்வி முறை மாறி 50 வருடங்கள் தான் ஆகிறது. ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மையே. 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் வரும். பொறுத்திருங்கள் இன்னும் 50-100 ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாறிவிடும்.

ஏதோ என் அறிவிற்குட்பட்ட அளவிற்கு எழுதியிருக்கிறேன்.

மாற்றம் ஒன்றே நிலையானது….

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6!!!

முதல் சுற்றுக்கு தயார் செய்வது எப்படினு பார்த்தாச்சு.

அடுத்த சுற்று “Technical Interview”. இந்த சுற்று பெரும்பாலும் உங்கள் ரெசுமேவைப் பொருத்தே இருக்கும்.

சொந்தமாக பிராஜக்ட் செய்திருந்தாலோ அல்லது பிராஜக்ட்டை பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலோ, அதைப் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தெரிவிக்கவும்.

பிறகு அவர்கள் அதிலிருந்தே கேட்பார்கள் ஓரளவிற்கு ஒப்பேற்றிக் கொள்ளலாம். முடிந்த அளவு பிராஜக்ட் செய்திருக்கும் Languageஐ Area Of Interestல் போடவும்.

AOIல் இருப்பதை ஓரளவிற்கு நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். AOIல் 2ற்கு மேல் போடாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு OOPS தான் தெரியும் ஏன்றால் கேள்விக் கேட்பவர் அதில் திறமையில்லாதவராக இருந்தாலும் அதிலே கேட்பார். அதில் அவர் திறமையுள்ளவராக இருந்தாலும் Fresher என்பதால் ஓரளவு சுலபமாகவே இருக்கும்.

அதனால் 4-5ஐப் போட்டு அதில் அறைகுறையாக தெரிந்து கொள்வதைவிட 1-2 போட்டு அதில் அதிகமாக தெரிந்து கொள்வதே சிறந்தது. அகல உழுவதைவிட ஆழ உழுவதே சிறந்தது.

முடிந்தவரை Group discussion செய்யவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதனாலயே அதிகம் கற்றுக் கொள்ள முடியும். படித்ததும் மறக்காது. நண்பர்களிடையே Mock Interview செய்து கொள்ளவும்.

Personal Interviewவிற்கு தயார் செய்வது என்று அடுத்து பார்க்கலாம்…

தொடரும்…

பிகு:
AOI தேர்ந்தெடுப்பது.
C நன்றாக தெரியுமென்றால் Data Structure போட்டுக் கொள்ளலாம். Stack, Queue, Linked List, Search, Sort Program எல்லாம் எழுத கற்றுக் கொள்ளவும். என் நண்பன் ஒருவனுக்கு Linked List Program எழுதனவுடன் ஒரு MNCல் Offer letter கொடுத்துவிட்டார்கள். புரிந்து படித்தால் Data Structure வாழ்க்கை முழுக்க மறக்காது.
C++, Java நன்றாக தெரியுமென்றால் OOPS போட்டுக் கொள்ளலாம்.
Oracle நன்றாக தெரியுமென்றால் RDBMS போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் லாஜிக்கலாக யோசித்துப் போடவும்.