அசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே???

தேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே???

எனக்கு தெரிந்த வகையில் ஒரு சின்ன விளக்கம்:

சத்ய யுகம்/கிருத்த யுகம்:
அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதா யுகம்:
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
ராமர் அயோத்தியுலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.

துவாபர யுகம்:
பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.
அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.
கிருஷ்ணர்-கம்சன்/சிசுபாலன்.

கலி யுகம்:
அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.
சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.
ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.
சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…

ஏதோ என்னளவில் தோன்றிய ஒரு விளக்கம்.

18 பதில்கள்

 1. அசுரகுணம்,தேவகுணம் என்பது நம் அனைவருக்குள்ளும் ஒளிந்துதான் இருக்கிறது.ஏதோ படத்தில் விவேக் சொல்லுவதுபோல்

  /…எனக்குள் தூங்கும் மிருகத்தை உசுப்பிவிட்டு…/

  வருவதுதான் அசுரகுணம்.

  தேவகுணம் எனும் சாத்விக குணம் மட்டும் இருந்தால் மனிதன் கோழையாகிவிடுவான்.அதனால் அசுரகுணம் at times வருவது நல்லதே.ரவுத்ரம் கொள் என எழுதினார் பாரதி.

  ஆனால் ரவுத்ரத்துக்கும் ஒரு எல்லை உண்டு.அதுதாண்டாம இருந்தால் அசுரகுணம் வரவேற்கப்படக்கூடியதே

 2. நான் அசுர குணமாக கருதுவது அடுத்தவருக்கு தீமை செய்வதைத்தான்.

  சகுனி சிரித்துக் கொண்டே செய்ததால் அது தெய்வ குணம் ஆகாது.

  ரவுத்திரம் இரு பக்கமும் கூர்மையைக் கொண்டுள்ள கத்தி. அது இருவரையும் பதம் பார்த்துவிடும்.

  “கடவுள் பாதி மிருகம் பாதி
  கலந்து செய்த கலவை நான்”னு கமல் கூட பாடி இருக்காரு…

 3. //சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம்.//

  //சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…//

  இது எப்படீங்க!!! சரியா தோனலியே!!

 4. நன்மனம்,
  என்னங்க இப்படி கேட்டுட்டீங்க!!!

  சுனாமி வந்தப்ப பாத்து வருத்தப்படுறது மனித குணம்.
  ஓடி போயி உதவறது தெய்வ குணம்.

  ஒரு குழந்தை பசில இருக்கும் போது பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.
  அதை பார்த்து அந்த பசியப் போக்கறது தெய்வ குணம்.

  வயசானவரோ, கர்ப்பிணி பெண்களோ பஸ்ல நின்னுட்டு வரும் போது அவுங்கள பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.
  நம்ம ஏழுந்திரிச்சி அவுங்களுக்கு சீட்டு கொடுக்கறது தெய்வ குணம்….

  சொல்லிக்கிட்டே போகலாம்.

 5. வெ.ப,

  /* அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.
  சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.
  ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.
  சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்… */

  அருமையாகச் சொன்னீர்கள். உண்மையில் இதுதான் யதார்த்தம்.

 6. வெற்றி,
  மிக்க நன்றி.

 7. நல்ல விளக்கம்.

  ஆனால் இதற்கு வஜ்ஜிரத்தனமாக மற்றொருவர் விளக்கம் கொடுத்த விளக்கத்தை நீங்கள் கவனித்தீர்களா?

  நவீன யுகத்தில் அசுரர்கள் – இஸ்லாமியர்.

  நவீன யுக தேவர்கள் – சங்க்பரிவார்கள்.

  அவதார புருஷர்களை அதில் அடையாளம் காட்ட மறந்து விட்டார்.

  ஒரு வேளை அது நரேந்திரமோடியும், அத்வானியுமாக கூட இருக்கலாம்.

  குசும்பு இறை நேசன்

 8. இறை நேசன்,
  மிக்க நன்றி.
  அவரோட கருத்தை அவர் சொல்லி இருக்கார். எனக்கு தெரிந்ததை நான் சொல்லி இருக்கேன். தயவு செய்து யாரோட பதிவையும் ஒப்பிடாதீர்கள். தப்பா நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

 9. நல்ல விளக்கம் பாலாஜி. பல ஆன்றோர்களும் சொல்லும் விளக்கம் இது தான்.

  ஏன் இந்தக் காலத்தில் அவதாரங்கள் நிகழ்வதில்லை என்பதற்கு வாரியார் சுவாமிகளைப் போன்ற ஆன்றோர்கள் சொன்னது இது தான். அந்தக் காலத்தில் ஒரு இராவணன், ஒரு கம்சன், ஒரு சகுனி, ஒரு துரியோதனன், ஒரு சிசுபாலன், ஒரு ஜராசந்தன் என்று இருந்தார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தருமனும் துரியோதனனுமாக இருப்பதால் மனதளவிலேயே அவதாரங்கள் நிகழ்கின்றன – எல்லோரையும் தருமனாக மாற்ற என்று சொல்லுவார்.

 10. குமரன்,
  நன்றி குமரன் ஐயா.

 11. //சுனாமி வந்தப்ப பாத்து வருத்தப்படுறது மனித குணம்.
  ஓடி போயி உதவறது தெய்வ குணம்.

  ஒரு குழந்தை பசில இருக்கும் போது பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.
  அதை பார்த்து அந்த பசியப் போக்கறது தெய்வ குணம்.

  வயசானவரோ, கர்ப்பிணி பெண்களோ பஸ்ல நின்னுட்டு வரும் போது அவுங்கள பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.
  நம்ம ஏழுந்திரிச்சி அவுங்களுக்கு சீட்டு கொடுக்கறது தெய்வ குணம்….//
  ஹிஹி. நம்மல தெய்வ குணத்தில் சேர்த்ததுக்கு நன்றிங்கோ.
  சும்மா ஒரு விளம்பரம் தான் 😉

 12. ஐயைய் யோ!! போச்சுடா…
  நான் ஏதோ, வந்தேறிகள் தேவர்கள், வராமல் இறங்கியவர்கள் அசுரர்கள் என்று தான் நினைத்தேன்…:D

  Jokes apart… அசுரர் என்பது Fallen people ஐ குறிக்கும் சொல். அவ்வளாவே… நீங்கள் சொல்வது போல் குணாதிசயமே…அதில் இனம், மதம் என்றெல்லாம் இல்லை.

  மனிதனை வெறுக்கச் சொல்லும் இறை நேசனின் மதம் தான் அசுர குணம், இறை நேசன் அதை கடைபிடிக்கும் ஒரு நல்ல மனிதர்.

  செல்வன்,
  ..
  ரவுத்ரம் கொள் என எழுதினார் பாரதி.
  ..

  “ரௌத்திரம் பழகு” என்று எழுதினார்.

 13. சிவா,
  மிக்க மகிழ்ச்சி.
  சுனாமி வந்தப்ப நான் மனுஷனாத்தான் இருந்தேன். (பண உதவி செய்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று உதவவில்லை என்ற வருத்தமிருக்கத்தான் செய்கிறது)

 14. //Jokes apart… அசுரர் என்பது Fallen people ஐ குறிக்கும் சொல். அவ்வளாவே… நீங்கள் சொல்வது போல் குணாதிசயமே…அதில் இனம், மதம் என்றெல்லாம் இல்லை.
  //

  சரியாக சொன்னீர்கள் சங்கர்.

  //மனிதனை வெறுக்கச் சொல்லும் இறை நேசனின் மதம் தான் அசுர குணம், இறை நேசன் அதை கடைபிடிக்கும் ஒரு நல்ல மனிதர்.
  //
  எந்த மதமும் சக மனிதர்களை வெறுக்கச் சொல்லித்தருவதில்லை சங்கர்.

 15. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்..

  வைரமுத்துவின் வரிகள் உஙகளின் கருத்தை எதிரோலிக்கின்றன..

  ச்ரிதர்

 16. //மனிதனை வெறுக்கச் சொல்லும் இறை நேசனின் மதம் தான் அசுர குணம், இறை நேசன் அதை கடைபிடிக்கும் ஒரு நல்ல மனிதர்.
  //

  ம்ஹ்ம்!

  எந்த மதமும் சக மனிதர்களை வெறுக்கச் சொல்லித்தருவதில்லை சங்கர்.

  நன்றி சகோதரரே.

 17. இது தான் அத்வைததின் அடிப்படை தத்துவம். மனதில் உள்ள அசுர குணத்தை விலக்கி தெய்வ குணத்தைக் காண் என்பது.

  கடவுள் தூரத்தில் இருந்து மேற்பார்வைப் பார்த்தது எல்லாம் அந்த யுகங்கள்.

  நம் உள் கிடப்பவர் தான் கட வுள்
  அவரை காண உன்னை தோண்டி போய் கெட்ட குணங்களை அகற்று என்பது

 18. இறை நேசன்,
  வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

  (உங்கள் பின்னூட்டத்தை நான் அன்றே பப்ளிஷ் செய்து விட்டேன். தமிழ்மண முகப்பில் வர இத்தனை நாட்கள் ஆகிவிட்டது :-()

  சிவா,
  //இது தான் அத்வைததின் அடிப்படை தத்துவம். மனதில் உள்ள அசுர குணத்தை விலக்கி தெய்வ குணத்தைக் காண் என்பது.

  கடவுள் தூரத்தில் இருந்து மேற்பார்வைப் பார்த்தது எல்லாம் அந்த யுகங்கள்.

  நம் உள் கிடப்பவர் தான் கட வுள்
  அவரை காண உன்னை தோண்டி போய் கெட்ட குணங்களை அகற்று என்பது
  //
  மிக்க நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: