புலிக் குட்டி

“தாய் 8 அடி பாய்ந்தால்,
குட்டி 16 அடி பாயும்” என்பது பழமொழி.

ஆனால் ஒரு சில தாய் புலிகள் 64 அடி பாய்ந்துவிடுவது குட்டிபுலிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது. தாய் புலியுடன் குட்டியை ஒப்பிட்டுபார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. நான் இப்பொழுது சொல்லப் போவதும் ஒரு குட்டி புலியை பற்றிதான்.

தாய்புலி சாதித்தளவு அந்த துறையில் யாரும் சாதிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இன்றும் தாய் புலி ஓய்வு பெறாமல் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அது இன்னும் சாதிக்க வேண்டியது எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது ஓய்வு பெறுவதிலும் எனக்கு விருப்பமில்லை.

தாய் புலியின் பாசறையிலிருந்து வந்த ஒரு புலி அதிகமாக பேர் வாங்கியது உண்மையே. ஆனால் இன்றைய நிலைமையில் அந்த புலி, குட்டி புலிக்கு போட்டியில்லை என்றே நினைக்கிறேன்.

தாய் புலியின் முதல் வாரிசு அந்த துறையில் வெற்றி பெறாமல் போனது யாருக்கும் வருத்தமில்லை. அடுத்த வாரிசு அந்த துறையில் சாதிக்கும் என்றும் நான் கருதவில்லை. ஆனால் இன்றைய நிலையில் அந்த குட்டி புலி அனைவரும் பாராட்டும் வகையில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. ஆனால் எனக்கு தெரிந்த வகையில் தாய் புலியின் இடத்தை குட்டி புலியால் பெற முடியாது என்றே நினைக்கிறேன்…

தாய் புலியின் வாரிசுகளில் ஒன்றான பெண் குட்டி புலி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

தாய் புலியோடு ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தால் குட்டி புலியின் நிலை பாராட்டுக்குரியதே!!!

என்ன இருந்தாலும் யுவன்சங்கர் ராஜா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தான்!!!

பின்குறிப்பு:
ஆ.வியில் வித்யா சாகரின் பேட்டியை பார்த்ததில், யுவனை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுதியது.