• Top Clicks

  • எதுவுமில்லை
 • அதிகம் பார்வையிடப்பட்டவை

 • Blog Stats

  • 28,692 hits
 • Advertisements

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3!!!

நாங்க பெங்களூர் வந்தவுடன் புரிந்து கொண்ட விஷயம் நம்மைத்தவிர (தமிழர்களை) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் பேசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்மைவிட மோசம்). நம்ம ஊர் பொண்ணுங்களும் பட்டையைக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடலை போடும் போது இங்கிலீஸ்ல பேசறாங்கனு புரிஞ்சிது).

எங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல பேசனா வேலை கிடைத்துவிடும்னு நம்பிக்கை. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுவோம்னு நான் சொன்னன். அவன் என் பேச்சைக் கேக்காம “Call Center Training”ல 5000 குடுத்து சேர்ந்தான்.

முதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective…). நம்ம எல்லாம் அதை எட்டாவதுல படித்து இருப்போம். இரண்டாவது வாரம் ஒரு தலைப்பை கொடுத்து 10 நிமிடம் பேச சொன்னார்கள். மூன்றாவது வாரம் GD.கடைசி வாரம் திடீரென்று தலைப்பை கொடுத்து பேச சொல்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000?

இதை நாங்களே ரூம்ல செய்யலாம்னு யோசிச்சி பண்ண ஆரம்பித்தோம்.
முடிந்தவரை ஒருவருக்கொருவர் இங்கிலீஸ்லயே பேசிக் கொண்டோம் (இது பயங்கர ஜோக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தலைப்பை குடுத்து பேச ஆரம்பித்தோம்.முதலில் மிகவும் சுலபமான தலைப்பை குடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தலைப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக தோன்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தலைப்பை குடுக்க… நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது.

கண்ணாடியைப் பார்த்து பேசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் சொன்ன அறிவுரை. அது எங்கள் அனைவருக்கும் பயன்பட்டது. 2 மாசத்துல எங்களுக்கே நம்பிக்கை வர ஆரம்பித்தது.

நான் சந்தித்த நபர்களில் பெரும்பாலும் எங்களை போலவே ஆங்கிலம் பேச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் சொன்னதெல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் மொழியல்ல. அது நம் அறிவின் அளவுகோலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக வேண்டிய தேவையுமில்லை. ஓரளவிற்கு திக்காமல் திணராமல் நாம் சொல்ல நினைத்ததை சொன்னாலே போதும்.

தினமும் “The Hindu” editorial page சத்தம்போட்டு படிக்கவும். தினமும் குறைந்தது 1-2 மணி நேரம் ஆங்கில செய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தலைப்பைக் கொடுத்துப் பேச பயன்படுத்திக் கொள்ளலாம். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதை எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.

பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Hutch customer careக்கு போன் செய்து பேசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இதை தான் செய்வான். அவனுடைய கேள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் பேசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City?, which is the better plan in Airtel….)

யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-).

தயவு செய்து பணத்தை “Call Center training”க்கு குடுத்து வீணாக்காதீர்கள். எந்த மொழியையும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்…

தொடரும்….

Advertisements

13 பதில்கள்

 1. தேவையிமில்லை : தேவையுமில்லை
  பயன்படுத்துவும் : பயன்படுத்தவும்
  சொல்லிக்கோள்ளவும் : சொல்லிக்கொள்ளவும்

 2. எ.பி யாரே,
  மிக்க நன்றி.

  தொடர்ந்து படிக்கவும்.

 3. ….பயல்
  நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை.
  ஹிண்டு பேபர்,தயக்கம் இல்லாமல் தப்பு தப்பாக பேசுவது ஒன்றே கற்றுக்கொள்ள வழி.
  நான் கத்துக்கொண்ட வழி இதைவிட மோசம்.
  சமயம் வரும் போது படிக்கலாம்.

 4. வடுவூர் குமார்,
  மிக்க நன்றி.

  வெட்டிப் பயல்னே எழுதுங்கள்…எதுவும் தப்பா எடுத்துக்கமாட்டேன் :-))

  அப்படியே நீங்க கற்றுக் கொண்ட வழியும் சொல்லுங்க…

 5. வெட்டிப்பயலாரே,

  நான் ‘ரெபிடெக்ஸ்’ படித்து, எவரையானும் பார்க்கப் போகும் போது பேச வேண்டிய டயலாக்குகளை மனதில் உருவாக்கிக் கொண்டே போவேன். பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது இதே யோசிப்பாக இருப்பேன்.

  நான் 750 ரூ சம்பளம் வாங்கிய போது ஹிண்டு பேப்பர்க்காக ரூ 75 ஒதுக்கிவிடுவேன். அது விரயச் செலவில்லை. நன்கு பயன் பட்டது.

  ஆங்கிலத்தில் தவறு ஏற்பட்டால் தெய்வக்குத்தம் மாதிரி ஃபீல் செய்ய வேண்டியதில்லை.

  எனினும் செய்வனத் திருந்தச் செய் என்பதை மனதில் வைத்துச் செயல்பாடுகள் இருந்தால் நல்லது நமக்குத்தான். உயரம் தொடும் போது உதவும்.

  நல்ல முயற்சி. உங்கள் தொடர் முடிவில் நான் மென்பொருள் துறைக்கு மாறும் வண்ணம் எழுதுங்கள் :-0)))

 6. //நான் ‘ரெபிடெக்ஸ்’ படித்து, எவரையானும் பார்க்கப் போகும் போது பேச வேண்டிய டயலாக்குகளை மனதில் உருவாக்கிக் கொண்டே போவேன். பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது இதே யோசிப்பாக இருப்பேன்.
  //

  ‘ரெபிடெக்ஸ்’ நல்ல துவக்கம்தான். அதை மறந்துவிட்டேன்.

  //பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது இதே யோசிப்பாக இருப்பேன்.
  //
  இண்டெர்வியுக்கு போகும்போது நானும் மனதிற்குள் சொல்லி பார்த்துக் கொண்டே போவேன்.

  //எனினும் செய்வனத் திருந்தச் செய் என்பதை மனதில் வைத்துச் செயல்பாடுகள் இருந்தால் நல்லது நமக்குத்தான். உயரம் தொடும் போது உதவும்.//
  தவறாக பேசுவது தவறல்ல. அந்த தவறை திருத்திக் கொள்ளாததே தவறு.

 7. // உங்கள் தொடர் முடிவில் நான் மென்பொருள் துறைக்கு மாறும் வண்ணம் எழுதுங்கள்//
  ஐயய்யோ இவ்வளவு பெரிய பொறுப்பெல்லாம் கொடுக்கறீங்க!!!
  மென்பொருள் துறைல விருப்பமிருந்தால் நீங்கள் எப்போழுது வேண்டுமென்றாலும் வரலாம்.

 8. இங்க softwareக்கும் call center servicesக்கும் கொஞ்சம் குழப்பம் ஆகுதோ?

 9. //இங்க softwareக்கும் call center servicesக்கும் கொஞ்சம் குழப்பம் ஆகுதோ? //

  “Call centre trainings” எல்லாம் நம்மல 1 மாசத்துல வெள்ளக்காரன் மாதிரி இங்கிலிபிஸ் பேச வைக்கிறன்னு பெங்களூர்ல கூவி கூவி கூப்பிட்டு இருந்தானுங்க…
  softwareக்கும் இங்கிலிபிஸ் தான முக்கியம் அதனால தான் அதை பத்தி முதல்ல சொல்லிட்டன்…

 10. வெட்டி சரியா சொல்லி இருக்க. அதுவும் இல்லாம, நம்ம ஆங்கிலம் நல்லா தான் பேசுகின்றோம் என்ற நம்மை நாமே நம்ப வேண்டும். நான் நல்லா பேசுகின்றேன் என்று பல பேர் என்னிடம் சொன்ன பிறகு தான், ஒ உண்மையிலே நாம நல்லா பேசுறோம் போல என்று நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் இன்னும் வளர வேண்டியது நிறைய உள்ளது.

 11. அருமையா போய்கிட்டு இருக்கு Mr.வெ.ப.

  தொடர்ந்து எழுதவும

 12. நல்ல வழிமுறைகளைச் சொல்கிறீர்கள் பாலாஜி. ஆங்கிலத்தில் பெரும்புலமை தேவையில்லை; ஆனால் தயக்கம் இன்றிப் பேச வேண்டும்; அது இந்த வேலைக்குத் தேவை. நாளையே வெளிநாட்டிற்குச் சென்றால் தயங்காமல் ஆங்கிலத்தில் பேச வேண்டுமே. அதற்காக. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ‘வோர்ட் பவர்’ புத்தகத்தை விட்டுவிட்டீர்களே. நான் அதைக் கொஞ்ச நாள் எடுத்துக் கொண்டு அலைந்தேன். அதனால் எனக்கு அவ்வளவாக பயன் இருந்ததில்லை. ஆனால் அதனால் பயனடைந்தவர்கள் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

 13. Kumaran, Even I used Word Power Made Easy, but I dont think it had any effect in getting a job.
  But it will help u for sure…

  (out of my place. so typing in English)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: