விடாது கருப்பு அவர்களுக்காக…

விடாது கருப்பு அவர்களே,
தங்களுக்கு நான் கேட்ட கேள்விகளால் தான் வருத்தம் என்றால் அதை நீங்கள் எனக்கு தெரியப்படுத்தி இருக்கலாம். நான் அந்த பதிவை நீக்கி இருப்பேன்.
அதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசுவது நாகரிகமன்று.

உங்களுக்கு பெரியாரைப் பற்றி நான் ஒரு கேள்வி கேட்டதற்கே இவ்வளவு கோபம் வருகிறது (அதில் நியாயம் இருக்கலாம். ஏனென்றால் அவர் பல ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கிறார்). ஆனால் அவர் மக்கள் வணங்குகின்ற சாமி சிலைக்கு செருப்பு மாலை போட்டால் எங்களுக்கு கோபம் வரக்கூடாது. அதுதானே உங்கள் நியாயம்?
(பெரியாரின் செயலுக்கு என்னுடைய பதிவுல Ganesh Prabhu சொன்ன பதில நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய கோபத்தில் இருந்த நியாயத்தைவிட பெரியாரின் கோபத்தில் இருந்த நியாயம் 1000 மடங்கு உயர்ந்தது என்று நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் அதுக்கு உங்க பதிவு காரணமல்ல. Ganesh Prabhu சொன்ன பதிலே காரணம்)

இன்று கலைஞர் “The Davinci Code” படத்தை தடை செய்ததின் காரணமென்ன?
கிறுத்துவ சகோதரர்கள் மனம் புண்படும் என்ற காரணத்தினால்தான்.
ஒரு படம் அவர்கள் மனதை புண்படுத்தும் என்ற போது, பெரியாருடைய செயல் எத்தனை மனங்களை புண்படுத்தி இருக்கும். இதை நீங்கள் உணரவில்லை.
(இதன் மூலம் கலைஞர் செய்தது தவறு என்று நான் சொல்லவில்லை.)

மேலும் உங்களைப் பொருத்தவரை தமிழ் பேசுபவர்கள்தான் திராவிடர்கள். அப்படி என்றால் திராவிட மொழிகள்னு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு சொல்வது ஏன்?
பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்றால் வட இந்தியாவில் இன்றளவும் ஒடுக்கப்பட்டுள்ள இனம் என்ன திராவிடமா?
(தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் Forward Classஐ தவிர அவ்வளவாக யாரையும் Software Industryயில் பார்க்க முடியவில்லை. பாவம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன என்றுக்கூட தெரியவில்லை)

கேள்வி கேட்பதால் நான் ஆரியன் என்று முடிவு கட்டி விடாதீர்கள்.
என்னைப் பொருத்தவரை நாம் அனைவரும் இந்தியர்கள் அவ்வளவே.
(இந்தியன் என்றால் இந்தி பேசுபவன் என்று அர்த்தமில்லை)

என்னுடைய Profileல் என்னைப் பற்றி உண்மையான விளக்கங்களைக் கூறியுள்ளேன்.

இதன் மூலம் நான் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது:
உங்கள்ல யாருக்காவது என்னுடைய கருத்துக்கள்ல வருத்தம் இருந்தால் என்னை திட்டுங்கள். வேறு யாரையும் திட்டாதீர்கள்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று