ஆட்சி செய்யுது ஆர்க்குட்

இன்னைக்கு எங்கப் பாத்தாலும் ஆர்க்குட்டப் பத்தி தான் பேச்சு…
அப்படி என்ன தான் இருக்குனு நானும் அதுல சேர்ந்தேன். (இதற்கும் Gmail மாதிரி நண்பர்களிடம் இருந்து அழைப்பு வேண்டும்)
அப்பறம் தான் அதோட மதிப்பு தெரிஞ்சிது…
எவன் எவளோட கடலை பொடறான், என்ன பேசிக்கிறாங்க எல்லாமே பார்க்கலாம்…இது யாஹீ மெசஞ்சரையே அடித்துவிட்டதுனு நினைக்கிறேன்…
அதுவும் எங்க கம்பனில மெசஞ்சர் எல்லாம் பிளாக் பண்ணிவிட்டார்கள்.
அதனால் பல பேருக்கு ஆர்க்குட்டே தெய்வமானது…..
Off-shoreku …Call me now என்று கம்பெனி மெயில் ஐடிக்கு அனுப்பினால் அவர்கள் கூப்பிட அரை மணி நேரம் ஆனது. அதுவே ஆர்க்குட்ல Scrap செய்தால் அடுத்த 2 நிமிடத்தில் கூப்பிட்டார்கள்.
பள்ளி நண்பர்களை மீண்டும் அறிமுகப்படுத்தியது… இவர்களை எல்லாம் வாழ்வில் மீண்டும் சந்திப்போமா என்று நினைத்த நண்பர்களை எல்லாம் மீண்டும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
இன்னும் ஒரு முக்கியமான ஒன்று : அதுதான் Communities.
மிகவும் சுவாரசியமான கம்யூனிட்டீஸ் நிறைய இருக்கிறது. நம்ம தமிழ்மணம் மாதிரியே பல சண்டைகள் அதுலயும் இருக்கு.
ஆனால் என்ன முகம் பார்க்கலாம். அவரோட நண்பர்களை எல்லாம் பார்க்கலாம். நானும் ஒரு 50 கம்யூனிட்டீஸ்ல சேர்ந்துவிட்டேன்.
இதில் மிக முக்கியம் நிறைய scrap பெற வேண்டும். Friendsum நிறையப் பேர் வேண்டும்!!!

ஆர்க்குட் டயலாக்:
இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வெச்சிக்கோ…
உன்னை விட Fans, Friends, Scraps அதிகமா சம்பாதிச்சி…
நீ எப்படி பில்ட் அப் கொடுக்கறியோ
அதே மாதிரி நானும் கொடுக்கல…
என் பேரு …….. இல்ல!!!

வாழ்க Orkut!!! வளர்க அதன் புகழ்!!!