இட ஒதுக்கீடு – ஒரு பார்வை

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சோழ நாட்டில் ஆனந்தபுரம் என்ற ஊர் இருந்தது. பெயரில் தான் ஆனந்தம் இருந்ததே தவிர மக்களின் வாழ்வில் அது இல்லை. 10 வருடமாகவே கடும் பஞ்சம் அந்த ஊர் மக்களை வாட்டி வதைத்தது. மக்கள் அனைவரும் கிழங்கையே தின்று வந்தனர்.
இதை அறிந்ததும் மன்னன் மிகவும் வருத்தப்பட்டான். அவனுடைய உணவுக்கூடத்திலோ மக்கள் அனைவரது பசியையும் தீர்க்குமளவுக்கு உணவு இல்லை.
சரி!!! இருக்கும் உணவை அனுப்பினால் முடிந்த அளவு பசியைத்தீர்க்கலாமே என்று இருக்கும் உணவை ஒரு மாட்டு வண்டியில் அனுப்பினார்.
முதலில் வருகின்றவர்களுக்கே உணவு என்ற நிலையானது.
1000 மக்கள் இருக்கும் அந்த ஊரில் முதலில் வரும் 100 பேருக்கே உணவு என்ற நிலையானது.
உணவு கிடைத்தவர்கள் நன்றாக சாப்பிட்டனர்.
முதல் நாள் வந்த 100 பேரும் அடுத்த நாள் மற்றவர்களை விட வேகமாக வர அவர்கள் சாப்பிட்ட உணவு உதவியது. இதுவே தினமும் நிகழ்ந்தது.
இது தான் இன்றைய இட ஒதுக்கீட்டின் நிலை.

இந்த இட ஒதுக்கீட்டை இரு தலைமுறைகள் பயன்படுத்திக் கொண்டது. இதற்கு மேல் இதே முறையில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தினால் அது இதுவரை பயன்படுத்திய கூட்டத்தையே சென்றடையும்.
உதாரணத்திற்கு நான் என்னையே சொல்லலாம். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்காக ஒதுக்கிய இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பொறியியல் படித்தேன். நான் பொருளாதாறத்தல், பெற்றோரின் கல்வி முதலியவற்றால் பிற்படுத்தப்பட்டவன்தான்.
ஆனால் நான் இப்பொழுது ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். எனக்கு அடுத்த சந்ததியினர் பிற்படுத்தப்பட்டவரா? அது எப்படி நியாயமாகும்? எப்படியும் நல்ல பள்ளியில் நகரத்தில் படிக்கும் என் வாரிசுகள், கிராமத்தில் சத்துணவுக்காவே பள்ளிக்கு வரும் வசதியற்ற பிள்ளைகளுக்கு கொடுக்கும் சளுகைளை பறிக்க போட்டிக்கு நிற்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பிறப்பாலே அந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இது என்னைப் போலவே சலுகைகளைப் பெற்று முன்னேறிய அனைவருக்கும் பொருந்தும். எனவே சலுகைக்கான தகுதி (Qualification, Criteria) மாற்ற வேண்டும்.
பெற்றோரின் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றைக் கொண்டே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்களில் ஒருவறேனும் கல்லூரி படிப்பு பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு இட ஒதுக்கிடு மறுக்கப்பட வேண்டும். படிக்காதவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே சலுகைகள் பெற வேண்டும்.
ஆகவே ஒரு தலைமுறைக்கு மேல் யாராலும் சலுகைகளைப் பெற முடியாது. படித்தவர்களின் பிள்ளைகள் ஓபன் கோட்டாவில் தான் வர வேண்டும்.
அதேப் போல் இட ஒதுக்கீடு என்று சீட்டு மட்டும் கொடுத்தால் வசதியற்றவர்கள் எப்படி படிப்பார்கள்? அதனால் அவர்களுடைய கல்லூரி (college + hostel) முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
கலர் டீவியும், கம்ப்யூட்டரும் தருவோம் என்ற இரு அரசுகளும் சொல்லும் பொழுது, இதுவும் முடியும் என்றே நம்புகிறேன்.
இட ஒதுக்கீடின் சதவிகிதமும் 5 வருடத்திற்கு ஒரு முறை 10% குறைந்துக் கொண்டே வர வேண்டும். ஆக இன்னும் 35 வருடத்திற்கு பிறகு இட ஒதுக்கீடே தேவையில்லை என்ற நிலை வர வேண்டும்.
அதாவது பிற்படுத்தப்பட்டோர்/ தாழ்த்தப்பட்டோர் இல்லை என்ற நிலை வர வேண்டும்.

அறிவைக் கொடு போதும்….. என்னைவிட எவனும் உயர்ந்தவனும் இல்லை!!! தாழ்ந்தவனும் இல்லை.

கல்வி இருந்தால் ஏகலைவனும் அர்ச்சுனனுக்கு நிகராணவனே!!!