கணவனைக் கொல்!!!

சுமதி தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
என் மாமியாருக்கு மனசாட்சியே கிடையாது. நான் தான் தினமும் சமைக்கறன், துணி துவைக்கிறன், பாத்திரம் வெளக்கறன், வீடு சுத்தம் பண்றன். ஆனால் அவள் என்னை மதிக்கிறதே கிடையாது. என்னை அவள் அடிமையாதான் பார்க்கிறாள்.

நேத்து ரஞ்சனி வீட்டுக்கு போயிருந்தேன். அங்க அவ மாமியார் எவ்வளவு பாசமாக எனக்கு காபி, பஜ்ஜி, கேசரி எல்லாம் கொண்டு வந்து வெச்சாங்க. அவுங்க தான் ரொம்ப நல்லவங்க.

இதைப்பற்றி யோசிக்க யோசிக்க சுமதிக்கு கோபம் அதிகமாகி கொண்டே போனது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு என்ன? என் கணவனுக்கு மனைவியாக இருப்பதினால் தானே அவள் என்னை இவ்வாறு நினைக்கிறாள். என் கணவனைக் கொன்றுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆமாம் அது தான் சரியான வழி.

[ரஞ்சனி வீட்டில், ரஞ்சனி அவள் தங்கையிடம்] என் மாமியாரை விட கொடுமைக்காரிய உலகத்திலயேப் பார்க்க முடியாது.
நேத்து நீ வரன்னு நான் செஞ்சி வைத்திருந்த பஜ்ஜி, கேசரி எல்லாம் எடுத்து அந்த பக்கத்து வீட்டு சுமதிக்கு குடுத்துட்டா படுபாவி.

ஒ.கே. கதைய படிச்சிட்டீங்க…
இந்த கதைல சுமதி நினைக்கற மாதிரிதான் நம்ம தமிழ்மணத்துல சில பேர் இந்து மதத்தை அழித்தால் சாதி பிரச்சனைக்கு முடிவு கட்டிடலாம்னு நினைக்கறாங்க.
மத்த மதங்கள் எல்லாம் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற மாதிரியும் அவர்களுக்கு ஒரு எண்ணம்…
இக்கரைக்கு அக்கரை எப்பொழுதும் பச்சையாகத்தான் தெரியும்.
ஆசையே அழிவுக்கு காரணம். எந்த உயிர்க்கும் தீங்கு இழைக்காதேனு சொன்ன புத்தரை வணங்குபவர்கள் தான் இலங்கைல நம் சகோதரர்களின் உயிரை குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தைக் காட்டுனு சொன்ன ஏசுபிரானை வணங்குபவர்கள் தான் அணுகுண்டை போட்டார்கள். இன்னும் பல உயிர்களை குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
எந்த இஸ்லாமியன் ஒருவனின் அண்டை வீடு பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறதோ அவன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவன் இல்லை என்று நபிகள் கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் பல இஸ்லாம் நாடுகள் இஸ்லாமை சேர்ந்தவை இல்லை. (முக்கியமாக பாகிஸ்தான்.)
அனைத்து மதங்களும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றின…
ஆனால் மனிதனுடைய பொறாமை, சுயநலம், பேராசை போன்ற குணங்கள் மேலோங்கி அது அவனை மட்டுமன்றி அவன் சார்ந்துள்ள சமுதாயத்தையே சீரழிக்கின்றது.
நம்ம வீடு அழுக்கா இருக்குதுனு பக்கத்து வீட்ல போய் தங்கிக்கறதுதான் புத்திசாலிதனமா? வீடு அழுக்கா இருந்த சுத்தம் பண்ணனும். சதி, பால்ய விவாகம் எல்லாம் ஒழிச்ச மாதிரி இன்னும் இருக்கற மற்ற மூட நம்பிக்கைகளையும் களையனும். அதை விட்டுட்டு இந்து மதம் ஒழிஞ்ச நம்ம வாழ்க்கை முன்னேறிடும்னு சொல்றது புருஷனைக் கொன்னுட்டா மாமியார் கொடுமை ஒழிஞ்சிடும்னு சொல்ற மாதிரி இருக்கு.