எனக்கு பிடித்த திரைப்படங்கள் – 1

இது சன் டிவில வர மாதிரி டாப் 10 இல்ல…
எல்லாமே எனக்கு பிடிச்ச படங்கள் தான்.

எதிர் நீச்சல்:
நாகேஷ் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் கூட என்று என்னை முழுதும் நம்ப வைத்த படம்.
முத்துராமன், சுந்தர் ராஜன், ஜெயந்தி, சவுக்கார் ஜானகி, ஸ்ரீகாந்த் ஆகியோறின் நடிப்பும் இயல்பாகவே இருந்தது. (நல்ல வேளை சவுக்கார் ஜானகி வழக்கம் போல அழாம நடிச்சிருந்தாங்க…)
“அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா?” – நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை நன்றாக எடுத்துக்காட்டுகின்ற பாட்டு.
ஒரே வீட்டிற்குள் வைத்து இவ்வளவு சிறப்பா படம் எடுத்ததுக்கு KBய கண்டிப்பா பாராட்டனும்.

தங்கமலை இரகசியம்:
ராஜா காலத்து படத்துல எனக்கு எப்பவுமே ஒரு ஈடுபாடு.
அதுவும் இதுல கொஞ்ஜம் மாயாஜாலமும் இருந்தது எனக்கு பிடித்ததற்கான ஒரு முக்கிய காரணம்.
விக்ரமாதித்தன் கட்டிலில் கிளிகள் பேசுவது, ஒவ்வொரு மலைக்குமான பாஸ்வேர்டை டீகோட் பண்றது, முரடனான சிவாஜிய ஜமுனா மாத்தறது போன்ற காட்சிகள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

ஆண்டவன் கட்டளை:
ஏன் எந்த படத்துலயும் கதாநாயகன ஒரு பக்கா “ஜெண்டில் மேன்”ஆ காட்ட மாட்றாங்கனு நான் ரொம்ப நாள் யொசிச்சதுண்டு. அதை நிறைவு செய்த படம் இது. இதில் சிவாஜி கல்லூரி ஆசிரியர்.
சிவாஜி அறிமுக காட்சி – காலையில் சிவாஜி கல்லூரிக்கு செல்வதைப் பார்த்து ஒரு கடை முதலாளி 9 மணியில் இருந்து 8:55க்கு திருத்துவார். இதைவிட சிவாஜியின் கேரக்டரை விளக்க காட்சி தேவை இல்லை.
ஒரு பெண்ணால் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது தான் கதை.
அமைதியான நதியினிலே ஓடம், ஆறு மனமே ஆறு, சிரிப்பு வருது சிரிப்பு வருது – போன்ற இந்த படத்தின் பாடல்களும் அருமை.

எங்க வீட்டுப்பிள்ளை:
எம்.ஜி.ஆர் படம்னாவே ஒரு ஈர்ப்பு. ஏன்னா படத்துல எப்படியும் நல்லவங்க ஜெயிப்பாங்க. எங்க வீட்டுப்பிள்ளை – வழக்கமான ஆள் மாறாட்ட கதை தான். ஆனால் அதை எம்.ஜி.ஆர் பண்ணும் போது அது ஒரு கிக்கு தான்.
நம்பியார் அப்பாவி எம்.ஜி.ஆர அடிக்கும் போது அழுகையா வரும் (சின்ன வயசுல… இப்ப பாத்தா சிரிப்பு வருது). அதுவே இன்னோரு எம்.ஜி.ஆர்ட நம்பியார் அடி வாங்கும் போது விசில் அடிக்க தோனும். இதுதான் எம்.ஜி.ஆரை நம்ம வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ள செய்தது.
இந்த படத்துல பாட்டு எல்லமே நல்லா இருக்கும்.

உலகம் சுற்றும் வாலிபன்:
இந்த மாதிரி படம் இதற்கு பிறகு வராதது எனக்கு வருத்தம்.
எம்.ஜி.ஆர்- இரட்டை வேடம். ஒருவர் ஆராய்ச்சியாளர் :). அவரை வில்லன் கடத்தி கொண்டுப் போக, அவருடைய கண்டு பிடிப்பு கெட்டவர்கள் கைக்கு போகமல் தடுக்கவும், மக்களுக்கு அதை பயன்படும்படி செய்யவும் இரண்டாவது எம்.ஜி.ஆர் ஒவ்வொரு நாடாக செல்வது தான் கதை.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு க்ளு. கடைசி வரை விறுவிறுப்பாக செல்லும் படம்.

இன்னும் நிறைய இருக்கு….

2 பதில்கள்

 1. ஆரம்பிச்ச அன்னிக்கே பதிவா போட்டுத் தாக்கறீங்க!

  நல்ல ரசனைகள்தான் உங்களுக்கு!

  ஆமா! முதல் பதிவுல போட்ட பின்னூட்டத்தை காணுமே!

 2. மன்னிக்கவும், என்னோட பதிவு தமிழ்மணத்துல சேர்ந்ததே எனக்கு தெரியல…
  24 மணி நேரம் ஆகும்னு நெனச்சிட்டு இருந்துட்டன்…

 3. //இது சன் டிவில வர மாதிரி டாப் 10 இல்ல…//

  யோவ். ஆரம்பத்திலேயே இப்படி தப்புப் பண்ணினா எப்படி? சன் டீ.வி.யை எல்லாம் கிண்டல் பண்ணலாமா? எதுக்கும் முதுகை க்ளீன் பண்ணி வச்சுக்கோங்க. முத்திரை குத்த ஈசியா இருக்குமில்ல.

 4. ஆரம்பத்துலயே வூடு கட்ட ஆரம்பிச்சிட்டீங்களா?
  எந்த படமும் எதோடயும் குறைந்தது இல்லனு சொல்றதுக்காகத்தான் அப்படி சொன்னன்…
  எங்க இருந்துதான் வராங்கனேத் தெரியல

 5. ரெண்டு எம்ஜார் படம் ஒரேயொரு ஜிவாஜி படம். உங்களை யார் என்று அடையாளம் காட்ட இதெல்லாம் உதவும்-:)

 6. ஐயா ஓகை அவைகளே,
  ஆண்டவன் கட்டளை, தங்க மலை ரகசியம் இரண்டும் சிவாஜி படம் தான்…நாகேஷ் படம்கூட தான் போட்டிருக்கேன் அதுக்கு என்னா சொல்றீங்க???

 7. நீங்க போட்ட அத்தனை படங்களிலும் சிறந்தது ஆண்டவன் கட்டளை. ஒவ்வொரு காட்சியும் காப்பியம் போல இருக்கும். குறிப்பாக அவரது மனதில் காதலாசை அரும்பும் கட்டம். டிபன் கேரியர் மாறிய பிறகு அதை உண்ணும் பொழுது விவரிக்கும் கட்டம். நாய் இறந்த பின் உண்மை தெளிந்து உணரும் கட்டம். காதலியை மீண்டும் பைத்தியமாகக் காணும் கட்டம். அப்பப்பா! உண்மையிலேயே சிறந்த படம்.

 8. மிக்க நன்றி ராகவன்,
  இந்த 5 படங்கள்ல 1 தேர்ந்தெடுக்க சொன்னீங்கன்னா நானும் அதைத்தான் தேர்ந்தெடுப்பேன்…
  அதுவும் “ஆறு மனமே ஆறு” பாடலுக்கு பிறகு அவர் தன் மாமன் மகளை கானும் காட்சி… தன்னோட தவறால தான் அந்த பெண்ணுக்கு இந்த நிலமை என்று உணரும் போதும்… என்ன அருமையான நடிப்பு…

 9. சரி அத வுடுங்க எம்ஜாருக்கு ரெண்டு ஜிவாஜிக்கு ரெண்டு. ஜிவாஜிக்கு மட்டும் கருப்பு வெள்ளை எம்ஜாருக்கு கலரா?

 10. அது தான் தொடரும்னு பொட்டு இருக்கோம் இல்ல…
  ஜிவாஜி கலர் படமும் வரும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: