Posted on அக்டோபர் 31, 2006 by வெட்டிப்பயல்
மதுரை மக்களே!!! இது உங்களை பத்தி இல்லை…நம்ம இளைய தளபதி விஜய் நடிச்ச படம்… அப்ப பாக்காம விட்டுட்டேன். நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பாத்துட்டு என்னால பதிவு போடாம இருக்க முடியலை. இந்த படம் யார் யார் பார்க்கலாம்.நம்ம முன்னால் பிரதம மந்திரி நரசிம்ம ராவ் மாதிரி சிரிப்பது எப்படினு தெரியாதா? கண்டிப்பா நீங்க இந்த படம் பாக்கனும். நம்ம வாழ்க்கையவிட இந்த உலகத்துல ஏதாவது கொடுமை இருக்கானு விரக்தில இருக்கீங்களா? இது உங்களுக்காகத்தான். படத்தோட [...]
Filed under: சினிமா சினிமா,நகைச்சுவை | 36 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 27, 2006 by வெட்டிப்பயல்
லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க… சரினு களம் எறங்கிட்டேன் ரெட்: அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும் அஜித்: அது!!! ———————————————————- அருணாச்சலம்: தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான். செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!! ———————————————————— ரன்: அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா? விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல… ————————————————————- [...]
Filed under: லொள்ளு,Uncategorized | 37 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 26, 2006 by வெட்டிப்பயல்
லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…சரினு களம் எறங்கிட்டேன் ரெட்:அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும் அஜித்: அது!!! ———————————————————- அருணாச்சலம்: தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான். செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!! ———————————————————— ரன்: அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா? விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல… ————————————————————- வல்லவன் சிம்பு: [...]
Filed under: நகைச்சுவை,லொள்ளு | 53 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 24, 2006 by வெட்டிப்பயல்
சின்ன வயசுல இருந்தே இந்த வியாதி நமக்கு இருக்குங்க. ஆனால் காலேஜ் சேர்ந்ததுக்கு அப்பறம்தான் இதை நானே உணர ஆரம்பித்தேன். இந்த வியாதியால் என்னை மாதிரி யாராவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. எங்க அப்பாக்கிட்ட இதப்பத்தி ஒரு தடவை சொன்னேன். அதுக்கு அவர் வியாதியும் இல்ல ஒரு மண்ணும் இல்லை… எல்லாம் கொழுப்பு வேற ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டாரு. எங்க அம்மாகிட்ட சொன்னா ஏதாவது சாமி குத்தமா இருக்கும்னு சொல்லி ஏதாவது [...]
Filed under: Uncategorized | 71 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 23, 2006 by வெட்டிப்பயல்
ஹிந்தி புரியாது என்ற காரணத்தால் பல முறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தும் பல நல்ல திரைப்படங்களை தவறவிட்டதுண்டு. ஆனால் இங்கே திரையிடப்படும் படங்கள் சப்-டைட்டிலுடன் இருப்பதால் துணிந்து சென்றேன். அமித்தாபின் டான் பார்த்ததில்லை என்றாலும் தலைவரின் பில்லா பார்த்திருந்ததால் கதை ஏற்கனவே தெரிந்திருந்தது. படம் முழுதும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக படம் படு ஸ்டைலாக இருக்கிறது. பாடல்களும் அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கின் ஸ்டையிலும் அருமை. (அமிதாப்போடு தயவு செய்து ஒப்பிட்டு [...]
Filed under: திரைப்படம்,Don | 48 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 20, 2006 by வெட்டிப்பயல்
என் இனிய வாசகர்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் பிறந்த நாளைவிட நான் அதிகம் ஆவலுடன் எதிர்பார்த்தது தீபாவளி திருநாளைத்தான். இப்ப அதை மிஸ் பண்றோம்னு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. சரி…. அடுத்த வருஷம் கண்டிப்பா அங்க இருப்பன்னு நம்பறேன். இந்தியால இருக்கவங்களுக்கு எல்லாம் என்னோட வேண்டுகோள். தயவு செய்து வீட்டிற்கு போய் அப்பா, அம்மாவோட சந்தோஷமா கொண்டாடுங்க. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் போன் பண்ணி பேசுங்க. அதுக்காக [...]
Filed under: diwali | 40 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 18, 2006 by வெட்டிப்பயல்
நேத்து எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்… “டேய் பாலாஜி, ப்ளாக்ல கதையெல்லாம் எழுதறியே! நீ ஏன் கவிதை எழுத முயற்சி பண்ண கூடாது?” “என்னது கவிதையா??? ஏன்டா யாரும் என் பிளாக் பக்கம் வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டயா?” “இல்லைடா… நீ எழுதறதை எல்லாம் கதைனு ஒத்துக்குறாங்க இல்லை… அதே மாதிரி கவிதையையும் ஒத்துக்குவாங்க” “அட நாதாரி!!! இத சொல்லத்தான் போன் பண்ணியா?” “இல்லடா மச்சி… நான் சீரியஸாத்தான் சொல்றேன்” “டேய்!!! கவிதை [...]
Filed under: நகைச்சுவை | 85 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 13, 2006 by வெட்டிப்பயல்
போன கதையை படிச்சிட்டு நம்ம ராம் ஏதோ டைரி குறிப்பை பார்க்கற மாதிரி இருக்குனு சொல்லிட்டாரு… எனக்கு இது என்னோட பெங்களூர் டைரி குறிப்பை நியாபகப்படுத்திடுச்சி… அடுத்தவங்க டைரி படிக்கறது தப்புனு ஃபீல் பண்ற நல்லவங்க இதோட நிறுத்திக்கோங்க… இதுக்கு மேல படிக்கறவங்க.. என்ன மாதிரியே ரொம்ப நல்லவங்கனு வெச்சிக்குவோம் காலை 7 : வீட்டிலிருந்து அம்மா போன் செய்திருந்தார்கள். அம்மா: என்னப்பா ஆபிஸிக்கு கிளம்பிட்டயா? நான்: குளிச்சிட்டேன்மா… சாப்பிட்டு கிளம்பனும் அவ்வளவுதான்… காலை 8: அலாரத்தை [...]
Filed under: நகைச்சுவை,லொள்ளு | 52 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 13, 2006 by வெட்டிப்பயல்
மக்களே!!! உங்களுக்காக மீண்டும் ஒரு தெலுகு படம்… படம் வந்து பல நாட்களானாலும் சமீபத்தில்தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சரி உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு. படத்தின் நாயகன் சித்தார்த். நாயகிகள் சதா, சார்மி, சலோனி (இந்த ஒரு காரணத்திற்காகத்தான் DVD எடுத்தோம் ) வெளிநாட்டில் சந்தோஷமாக வாழும் கதாநாயகன், தன் தாத்தா(ANR) வின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் தனக்கு பிடித்த பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்று முடிவெடுக்கிறார். சிறுவயதில் தன்னுடன் பழகிய [...]
Filed under: திரைப்படம் | 16 மறுமொழிகள் »
Posted on அக்டோபர் 12, 2006 by வெட்டிப்பயல்
டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது… வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது. இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல… மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க… அங்க வராம இங்க வந்து [...]
Filed under: சிறுகதை | 118 மறுமொழிகள் »